வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு வெற்றிகர பரிசோதனை – டிஆர்டிஓ

இந்தியா

வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு வெற்றிகர பரிசோதனை – டிஆர்டிஓ

வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் தொலைதூர வெடிகுண்டு வெற்றிகர பரிசோதனை – டிஆர்டிஓ

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உள்நாட்டில் உருவாக்கிய தொலைதூர வெடிகுண்டை, விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.

வானிலிருந்து, தரை இலக்குகளை தாக்கும் தொலைதூர வெடிகுண்டை, ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ அமைப்பின் இமாரத் ஆய்வு மையம் உருவாக்கியது. இந்த குண்டு, விமானப்படையின் போர் விமானத்தில் இருந்து வீசி இன்று பரிசோதிக்கப்பட்டது. இதன் செயல்பாடு பல சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. அது தரை இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.

இந்த வெற்றிக்காக, டிஆர்டிஓ, விமானப்படை குழுவினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த தொலைதூர வெடிகுண்டின் வெற்றிகர பரிசோதனை, இந்த வகை ஆயுத தயாரிப்பில் முக்கியமான மைல்கல்-ஐ குறிக்கிறது என டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி கூறினார்.

Leave your comments here...