நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி – ரூ.180 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!

இந்தியா

நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி – ரூ.180 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!

நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி – ரூ.180 கோடிக்கும் மேற்பட்ட  திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுகிறார்..!

கேதார்நாத்துக்கு நவம்பர் 5-ம் தேதி செல்கிறார் பிரதமர் மற்றும் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சமாதியை தொடங்கி வைக்கிறார்

உத்தராகண்ட் கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி, நவம்பர் 5ம் தேதி செல்கிறார். கேதார்நாத் கோயிலில் பிரதமர் பிரார்த்தனை செய்கிறார். அதன்பின், ஆதி சங்கராச்சார்யா சமாதியை திறந்து வைக்கிறார் மற்றும் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சிலையை தொடங்கி வைக்கிறார். 2013ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த பிறகு, இந்த சமாதி மீண்டும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மறுகட்டுமான பணியும், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அவர் இத்திட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்தார்.

சரஸ்வதி அஸ்தாபத்தில் (ரிஷிகேஷ்) முடிக்கப்பட்ட மற்றும் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பிரதமர் ஆய்வு செய்கிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். நிறைவு செய்யப்பட்ட முக்கிய கட்டுமான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

சரஸ்வதி நதி தடுப்புச் சுவர் மற்றும் படித்துறைகள், மந்தாகினி ஆறு தடுப்புச் சுவர், தீர்த் புரோகித் இல்லங்கள் மற்றும் மந்தாகினி ஆற்றில் கருட் சாத்தி பாலம் உட்பட முக்கிய கட்டுமான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் ரூ.130 கோடிக்கும் மேற்பட்ட செலவில் முடிக்கப்பட்டுள்ளன. சங்கம் படித்துறை மறுசீரமைப்பு, முதல் உதவி மற்றும் சுற்றுலா உதவி மையம், நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, இரண்டு விருந்தினர் இல்லங்கள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு மையம், மழைக்கால தங்குமிடம், சரஸ்வதி மக்கள் வசதி மையம் உட்பட ரூ.180 கோடிக்கும் மேற்பட்ட பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Leave your comments here...