ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் – 6வது முறையாக இந்தியா தேர்வு.!

இந்தியாஉலகம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் – 6வது முறையாக இந்தியா தேர்வு.!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் – 6வது முறையாக இந்தியா தேர்வு.!

ஆப்பிரிக்க நாடுகள்- 13 உறுப்பினர்கள்,  ஆசிய -பசிபிக் நாடுகள் -13 உறுப்பினர்கள்,  கிழக்கு ஐரோப்பிய நாடுகள் -6 உறுப்பினர்கள்,  லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகள் – 8 உறுப்பினர்கள்,  மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள்-7 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 193 வாக்குகளில் 184 வாக்குகளை இந்தியா பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக மனித உரிமைகள் கவுன்சில் ( UNHRC) திகழ்கிறது. இதன் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

இந்த நாடுகளின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா 5வது முறையாக  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, 2019-2021ம் ஆண்டுவரை இந்தியா உறுப்பினராக இருந்து வருகிறது.இந்தியாவின் பதவிக்காலம் இந்த  ஆண்டு இறுதியில் முடிவு பெறுகிறது. இதேபோல், வேறு நாடுகளின் பதவிக் காலமும்  இந்த ஆண்டுடன் நிறைவுப் பெறுகிறது.

இந்நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகளை பெற்று  இந்தியா ஆறாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வாகியுள்ளது.  2022 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரை இந்தியா உறுப்பினராக இருக்கும். 

இந்திய தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ளது. எனவே, தனது பதவிக் காலம் முடிந்தது இந்தியா கட்டாய ஓய்வு எடுத்தாக வேண்டும்.கஜகஸ்தான், மலேசியா, கத்தார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.பெனின், கேமரூன், எரித்ரியா, காம்பியா , சோமாலியா, லிதுவேனியா,  மாண்டினீக்ரோ, அர்ஜென்டினா, ஹோண்டுராஸ் ,  பராகுவே, பின்லாந்து, லக்சம்பர்க் , அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்  உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளன

Leave your comments here...