குவைத் நாட்டில் திமுக சார்பில் முப்பெரும் விழா..!

அரசியல்

குவைத் நாட்டில் திமுக சார்பில் முப்பெரும் விழா..!

குவைத் நாட்டில் திமுக சார்பில் முப்பெரும் விழா..!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டில் குவைத் திமுக சார்பாக முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் குவைத்தில் வாழும் சமூக ஆர்வலர்களுக்கும், திராவிட உணர்வாளர்களுக்கும் செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல் விருதுகள் 2021 எனும் தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டன. தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களும் பேச்சாளர்களும் காணொளி மூலம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

குவைத் நாட்டில் குவைத் திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தாயகத்திலிருந்து தி.மு.கழக முன்னணி நிர்வாகிகளையும் கழக பேச்சாளர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து முப்பெரும் விழாவை மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதுபோல் இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் சிறப்பு விருந்தினர்கள் காணொளி மூலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
குவைத் திமுக செயலாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த முப்பெரும் விழாவிற்கு குவைத் திமுகவின் தலைவர் ஆலஞ்சியார் தலைமை ஏற்றார். குவைத் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் திருவண்ணாமலை தளபதி தி.பிரபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். குவைத் திமுகவின் மகளிர் அணி செயலாளர், ஆசிரியை கோவை டி.கே.சரண்யா தேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மன்னை ரஃபீக், மேட்டுவிளை ஜ.ஜானவாஸ், கரம்பக்குடி கே.அப்பாஸ், தானிப்பாடி சே.அஷ்ரப் அலி , திருத்துறைப்பூண்டி பா.இராமன், பத்தமடை சிந்தாபக்கீர், பத்தமடை நாகூர், தளபதி ஆர்.செந்தில்சூர்யா, நாகை ஜோசப் பெர்லின், அலிவலம் மஸ்தான். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும், தமிழ் ஆர்வலருமான மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி புரவலர் திருவாரூர் தமிழ்ச்சங்கம் இணை இயக்குனர் சுகாதார துறை அவர்களும், கழக அயலக அணி செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா அவர்களும், முசிறி சட்டமன்ற உறுப்பினர், திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் அவர்களும், கழக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன் அவர்களும், பெரியார் மருத்துவ குழும இயக்குனர் மருத்துவர் கௌதமன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக காணொளி மூலம் கலந்துகொண்டு கழக வரலாற்றை தங்களின் சிறப்புரை மூலம் பறைசாற்றினார்.

இந்த முப்பெரும் விழாவில் செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல் சார்பாக விருதுகள் 2021 எனும் தலைப்பில் குவைத் திமுக பொறியாளர் அணி செயலாளர் புதுக்கோட்டை வீ.அருள்செல்வன் அவர்களுக்கு “பெரியார் விருது”, சமூக ஆர்வலர் இன்பத்தமிழ் இளங்கோவன் அவர்களுக்கு “அண்ணா விருது”, குவைத் திமுக செய்தி மற்றும் மக்கள் தொடர்புச் செயலாளர் குடந்தை சி.தியாகராஜன் அவர்களுக்கு “கலைஞர் விருது,” குவைத் திமுக பொருளாளர் புதூர் உத்தமனூர் ஜலீல் முஸ்தபா அவர்களுக்கு “பேராசிரியர் விருது,” குவைத் கடற்கரை நண்பர்கள் குழு மற்றும் குவைத் இந்தியன் சோசியல் சர்வீஸ் அமைப்பின் தலைவர் சமூக ஆர்வலர் கேப்டன் தானிப்பாடி பி.ஷேக் இஸ்மாயில் அவர்களுக்கு “வளைகுடா பெரியார் ச.செல்லப்பெருமாள் விருது”, குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் தலைவர் ,சமூக ஆர்வலர் பூதமங்கலம் அ.முஹம்மது அலி அவர்களுக்கு “செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டு விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி குவைத் திமுக சார்பாக நடைபெற்ற கலைஞர் நினைவு மெய்நிகர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு 21 கிலோமீட்டர் ஓடிய வைத்தி முக துணைப் பொருளாளர் கரம்பக்குடி ஜாபர் சாதிக் மற்றும் குவைத் திமுக மண்டல இளைஞரணி பொறுப்பாளர் சீர்காழி எஸ்.ஹாஜி அலி ஆகியோருக்கு பாராட்டு பத்திரமும் ,சான்றிதழும், மாரத்தான் பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 100 பேருக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்த முப்பெரும் விழாவில் மறைந்த இளைய இசைமுரசு ஈ.எம்.பாஷா அவர்களின் அன்பு புதல்வர் ரியாஸ்கான் அவர்கள் கழக பாடல் பாடினார்.நிகழ்வில் மறைந்த வளைகுடா பெரியார் ச.செல்லபெருமாள் அவர்களின் திருவுருவப்படத்தை குவைத் திமுக மகளிரணி செயலாளர் பெரியார் விருது பெற்ற கோவை டி.கே.சரண்யா தேவி அவர்கள் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்ட முன்னாள் கழகத் துணைச் செயலாளர் மீனாட்சி சூரியபிரகாஷ், துவரங்குறிச்சி அப்துல் வாஹித், புதுவை ந.பாஸ்கரன், கூடல்நகர் தோழமை குழுமம் சத்திரமனை அசன் முகமது, விசிக அறிவழகன், பெரியார் நூலகம் சித்தார்த்தன், பெரியார் பிஞ்சு தஞ்சை தீ.சித்தார்த் , வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்க தலைவர் ஹமீது, குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் செயலாளர் சையது அபுதாஹிர், இந்தியன் சோசியல் சர்வீஸ் திட்டச்சேரி நிசான் ஹலீம், மூத்த பத்திரிகையாளர் நெல்லை பீர் மரைக்காயர், திமுக சுல்தான் இப்ராஹிம் மலேசியா திமுக வை.இளங்கோவன், ஓமன் திமுக சௌகத் அலி, நவநீதகிருஷ்ணன், பூண்டியார் பாசறை கொரடாச்சேரி காளிமுத்து, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

குவைத் திமுக நிர்வாகிகள் திருத்துறைப்பூண்டி சபரிவாசன், மதியழகன், உளுந்தூர்பேட்டை நசீர் நெல்லை வில்சன், வீராசாமி, மன்னை அப்பாஸ், குடந்தை ஆர்.முருகன், ஸ்டீபன் ரோசாரியோ கள்ளக்குறிச்சி மதியழகன், புது ஆத்தூர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி முருகன், பூண்டி சுப்பிரமணியன், லால்குடி சித்திக், தேவசகாயம் செந்தில் ராஜா, ஆலங்குடி கார்த்தி, ஈரோடு முஸ்தபா மற்றும் குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தோழமைக் கட்சி நண்பர்களும், மகளிர் குழந்தைகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இறுதியாக குவைத் திமுகவின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் கொணலை க.மணிகண்டன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இரவு உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Leave your comments here...