ரஷ்யாவில் சாகச வீரர்கள் 23 பேருடன் சென்ற விமானம் விபத்து.! 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்

உலகம்

ரஷ்யாவில் சாகச வீரர்கள் 23 பேருடன் சென்ற விமானம் விபத்து.! 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்

ரஷ்யாவில் சாகச வீரர்கள்  23 பேருடன் சென்ற விமானம் விபத்து.! 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என  தகவல்

ரஷ்யாவின் டாடார்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள மென்சிலின்ஸிக் என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராசூட் சாகச வீரர்கள் 21 பேர் உள்பட 23 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த 23 பேரில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏனைய 16 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave your comments here...