கையிருப்பில் நிலக்கரி- மின் தட்டுப்பாடு வராது – மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

இந்தியா

கையிருப்பில் நிலக்கரி- மின் தட்டுப்பாடு வராது – மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

கையிருப்பில் நிலக்கரி- மின் தட்டுப்பாடு வராது – மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்திருக்கிறார்.

டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்தபின் அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்:- நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி அனுப்புவதாக கெய்ல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை; இனியும் இருக்காது. மேலும் நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசிவருகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Leave your comments here...