துறைமுகங்களை கண்காணிக்கும் ‘மை போர்ட் செயலி’: கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்தியா

துறைமுகங்களை கண்காணிக்கும் ‘மை போர்ட் செயலி’: கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

துறைமுகங்களை கண்காணிக்கும் ‘மை போர்ட் செயலி’: கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

துறைமுக நடவடிக்கைகளை கண்காணிக்கும் ‘மை போர்ட் செயலியை’ மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த செயலி, துறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மூலம் கண்காணிக்கிறது. வெளிப்படைத்தன்மையையும் மற்றும் தகவல்களை எளிதாக பெறுவதையும் இந்த செயலி ஊக்குவிக்கிறது. கப்பல் நிறுத்தம், கன்டெய்னர் நிலவரம், கட்டணம், ரசீது, துறைமுகத்தின் விடுமுறை நாட்கள் போன்ற தகவல்களையும் இந்த செயலியில் 24 மணி நேரமும் பெறலாம்.

மேற்கு வங்கத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் இந்த செயலியை தொடங்கி வைத்து, ரூ.352 கோடி மதிப்பிலான திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஹால்டியா துறைமுகத்தில் 1 மெகா வாட், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தையும் மத்திய அமைச்சர் திரு சோனோவால் தொடங்கி வைத்தார்.

Leave your comments here...