ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

இந்தியா

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்’ என, தெரிவிக்கப்பட்டது. இதில், ஹெலிகாப்டர்களுக்கு 3,850 கோடி ரூபாயும், வெடி பொருட்களுக்கு 4,962 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பில், 11 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கான உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

Leave your comments here...