கன்னையாகுமார், கட்சிக்கு உண்மையாக இல்லை – சிபிஐ-யின் தேசிய பொதுச்செயலாளர் புலம்பல்..!

அரசியல்

கன்னையாகுமார், கட்சிக்கு உண்மையாக இல்லை – சிபிஐ-யின் தேசிய பொதுச்செயலாளர் புலம்பல்..!

கன்னையாகுமார், கட்சிக்கு உண்மையாக இல்லை – சிபிஐ-யின் தேசிய பொதுச்செயலாளர்  புலம்பல்..!

குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்‍னேஷ் மேவானி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையாகுமார் இருவரும் காங்கிரசில் இணைந்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கன்னையாகுமார், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார்

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ.யின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, கன்னையா குமார் கட்சியிலிருந்து தன்னை தானே விலக்கிக்கொண்டதாகவும், அவர் கம்யூனிச கொள்கையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவரின் தனிப்பட்ட முடிவு என்றும், சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தை படைக்க போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பிடித்திருந்தால் அவர் கட்சியிலிருந்து நிச்சயம் வெளியேறியிருக்க இருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற நடந்த கட்சியின் கூட்டத்தில், கூட கட்சியின் கொள்கையை வளர்க்க வேண்டும் என பேசியதாகவும், ஆனால், திடீரென அவர் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.

Leave your comments here...