கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாஉலகம்

கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் தொற்று, தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா ஒழிவதற்கான வாய்ப்பு என்பது இப்போதைக்கு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஒரு பக்கம் தடுப்பூசி போடப்பட மறுபுறம் தொற்றுகள் எண்ணிக்கை பதிவாகி கொண்டே தான் உள்ளது. இந் நிலையில் கொரோனா தொற்றானது நீண்ட காலத்துக்கு இருக்கும் என்றும், பெரும்பான்மையான மக்களுக்கு இந்த தொற்று பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் கூறியதாவது:- கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும். தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்று பாதிப்பு ஆகியவைதான் கொரோனா நீண்ட காலத்துக்கு தொற்று நோயாக இருக்குமா என்பதை தீர்மானிக்கும். நாம் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்துகிறோம். வைரஸ் நம்மை கட்டுப்படுத்தாது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிர்காலத்தில் தொற்று தாக்கத்துக்கு வாய்ப்பு குறைவு. கொரோனா தொற்று ஒழிந்து போவதற்கான வாய்ப்பு இல்லை.

தொற்றுநோயால் ஏற்படுகிற இறப்புகள், ஆஸ்பத்திரி சேர்க்கை, துயரம், சமூக பொருளாதார மற்றும் சுகாதார இழப்பை தடுக்க வே்ணடும் அல்லது குறைக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சம் உலகளவில் குறைவாகவே இருக்கிறது. எனவே பெரும்பாலான மக்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...