புரட்டாசி முதல் சனிக்கிழமை கோவில்கள் முன் திரண்ட பக்தர்கள்..!

ஆன்மிகம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை கோவில்கள் முன் திரண்ட பக்தர்கள்..!

புரட்டாசி முதல் சனிக்கிழமை கோவில்கள் முன் திரண்ட பக்தர்கள்..!

புரட்டாசி சனிக்கிழமையான இன்று கோவில்கள் முன் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர். புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

தற்போது கொரோனா அச்சத்தால் கோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை அருள்மிகு கூடலழகா் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் வெளியில் இருந்து சூடம் ஏற்றி தரிசனம் செய்தனர்.

இதேபோல தல்லாகுளம் பெருமாள் கோவில், மேலமாசி வீதி மதனகோபாலசாமி கோவில், உள்ளிட்ட பெருமாள் கோவில் முன்புறம் நின்று ஏராளமான பக்தர்கள் சூடம் ஏற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...