தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு..!

அரசியல்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு..!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, இன்று பதவியேற்க உள்ளார்.தமிழகத்தின் ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெறு பதவியேற்பு விழாவில், ஆர்.என்.ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக, பதவியேற்பு விழாவில் 500 நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்

Leave your comments here...