தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சமூக நலன்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் தென்மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18ம் தேதி தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

19ம் தேதி: தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரவு கால் மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...