ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்

இந்தியா

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்ய கடந்த சில 3 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்று வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்நிறுவனத்தை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க தற்போது டாடா குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.

Leave your comments here...