ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி; மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியா

ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி; மத்திய அரசு ஒப்புதல்..!

ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி; மத்திய அரசு ஒப்புதல்..!

ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

‘நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில், 13 துறைகளுக்கான உற்பத்தி சார்ந்தஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்படும்’ என, மத்திய அரச அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, ஜவுளித்துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு, 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் வாயிலாக, கூடுதலாக 7.5 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும், பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் ஜவுளித்துறையில் புதிதாக 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கவும், மூன்று லட்சம் கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசு கணக்கிட்டுள்ளது. இத்திட்டத்தால், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் அதிக பயனடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...