ரஷ்யாவில் நடைபெறும் “ஜாபாட் 2021” எனும் பல்முனை பயிற்சியில் பங்கேற்க்கும் இந்திய ராணுவம்..!

இந்தியாஉலகம்

ரஷ்யாவில் நடைபெறும் “ஜாபாட் 2021” எனும் பல்முனை பயிற்சியில் பங்கேற்க்கும் இந்திய ராணுவம்..!

ரஷ்யாவில் நடைபெறும் “ஜாபாட் 2021” எனும் பல்முனை பயிற்சியில் பங்கேற்க்கும் இந்திய ராணுவம்..!

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜாபாட் 2021 எனும் பல்முனை பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்கவுள்ளது.

இருநூறு வீரர்களை கொண்ட இந்திய ராணுவ குழு ஒன்று ரஷ்யாவில் உள்ள நிஜ்னியில் 2021 செப்டம்பர் 3 முதல் 16 வரை பல்வேறு நாடுகள் பங்குபெறவுள்ள ஜாபாட் 2021 எனும் பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு படைகளில் பயிற்சிகளில் ஒன்றான ஜாபாட் 2021, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்தும், யூராசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் இருந்து 12-க்கும் அதிகமான நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.

இதில் பங்கேற்கவுள்ள நாகா படைப்பிரிவு அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தக்கூடிய பிரிவாகும். கலந்துகொள்ளும் நாடுகளுக்கிடையே ராணுவ மற்றும் யுக்தி சார்ந்த நட்புறவை மேம்படுத்துவது இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
இயந்திரம், விமானம், ஹெலிகாப்டர், பயங்கரவாத எதிர்ப்பு, எதிர்ப்பு பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய படைப்பிரிவு ஈடுபடும்.

Leave your comments here...