பாராலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு.!

இந்தியாதமிழகம்விளையாட்டு

பாராலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு.!

பாராலிம்பிக் :  வெள்ளி பதக்கம் வென்ற  மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு.!

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 8-வது நாளான நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில்  இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி  வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  

இந்நிலையில் மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில், இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக.31) அறிவித்துள்ளார்.


இது குறித்து மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியது:- பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள், சளைக்காத தன் திறமையால் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் விருதுகளை வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave your comments here...