350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரி சோதனையில் சிக்கிய ஜேப்பியார் கல்விக் குழுமம்..!

சமூக நலன்

350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரி சோதனையில் சிக்கிய ஜேப்பியார் கல்விக் குழுமம்..!

350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரி சோதனையில் சிக்கிய ஜேப்பியார் கல்விக் குழுமம்..!

கடந்த 7-ம் தேதி முதல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும், ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன் ஏற்றுமதி நிறுவனம், சிமெண்ட் மற்றும் பால் உற்பத்தி என பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார் 1988ம் ஆண்டு சென்னை – மாமல்லபுரம் சாலையில் சத்தியபாமா இன்ஜி னியரிங் கல்லுாரியை துவங்கினார். இதன்பின் ஜேப்பியார் பனிமலர் பெயர்களில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லுாரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக, வருமான வரி ஏய்ப்பு செய்வதாக ஜேப்பியார் கல்வி குழுமத்தின் மீது புகார் எழுந்தது. அதையடுத்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் இன்ஜினியரிங் கல்லுாரி அதன் இயக்குனர்கள் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சூளைமேடு பாலிடெக்கனிக், பொறியியல் கல்லூரி, அண்ணாநகர் குழும தலைவர் வீட்டில் சோதனை நடந்தது. மேலும் கல்வி நிறுவனங்களில் நிர்ணயக்கப்பட்ட தொகையை வாங்கியது போல கணக்கு காண்பித்துவிட்டு, நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அதை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வரித்துறையினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதுவரை நடத்தபட்ட சோதனையில் ஜேப்பியார் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களில் 350 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 32 இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...