பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பு இந்தியா’-வுக்கு ஊக்கம்: ரூ 1,350 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!

இந்தியா

பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பு இந்தியா’-வுக்கு ஊக்கம்: ரூ 1,350 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!

பாதுகாப்பு துறையில் ‘தற்சார்பு இந்தியா’-வுக்கு ஊக்கம்: ரூ 1,350 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!

பதினான்கு ஒருங்கிணைந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் பாதுகாப்பு அமைப்புகளை (ஐஏடிஎஸ்) ரூ 1,349.95 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மகேந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட்டுடன் பாதுகாப்பு அமைச்சகம் புதுதில்லியில் உறுதி செய்தது.

ராணுவ தளவாடங்கள் கொள்முதல் பிரிவில் ‘இந்திய பொருட்களையே வாங்கு மற்றும் உற்பத்தி செய்’ பிரிவின் கீழ் இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை தருவதோடு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டு ராணுவ தளவாட தொழில்களுக்கு பெரும் உந்து சக்தியை அளிக்கும்.

இந்திய கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் திறனை இந்த அமைப்பு மேம்படுத்தும்.எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஆயுதங்களை தூரத்தில் இருந்தே கண்டறியும் திறன் கொண்ட இந்த அமைப்பு, எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் ஏவும் ஆயுதங்களை திருப்பிவிடும் திறமையையும் கொண்டதாகும்.

அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்புக்கு வலுவூட்ட உறுதி மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நாட்டிலேயே வளர்ந்த ராணுவ தளவாட தொழில்களின் மூலம் பல்வேறு உபகரணங்களை படைப்பிரிவுகளுடன் இணைக்கவும், முன்னேறிய தொழில்நுட்பங்களில் நாட்டை தற்சார்பு அடைய செய்யவும் பணியாற்றி வருகிறது.

Leave your comments here...