தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் செப்.,1ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுதும், அனைத்து வகை வகுப்புகளையும், குறிப்பாக தொடக்க பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர்., அறிவுறுத்தியுள்ளது. அதனால், வரும் 1ம் தேதி பள்ளிகளை திறந்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ளது.

* ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

* மருத்துவத்துறை துணை இயக்குனர்கள் பள்ளிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

* பள்ளிகளில் கை கழுவுவதற்கு கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளிகளை திறப்பதற்கு முன்பே வளாகங்களை சுத்தப்படுத்தி இருக்க வேண்டும்.

* பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

* மாணவர்கள் 6 அடி இடைவெளியில் அமர்ந்து இருக்குமாறு இருக்கைகள் அமைக்க வேண்டும்.

* கொரோனா நோய் அறிகுறி உள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது.

* தகுதி உடைய மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.

* மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Leave your comments here...