இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் – தலீபான்கள் அறிவிப்பு

உலகம்

இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் – தலீபான்கள் அறிவிப்பு

இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் – தலீபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார்.

காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள்மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

அதுபோன்று இந்தமுறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும் என உலகச் சமுதாயம் அஞ்சி வருகிறது. இதன் காரணமாகவே கொடூரமான தலிபான்கள் ஆட்சியில் வாழ்வதைவிட வேறு எங்காவது செல்லலாம் என அஞ்சி மக்கள்கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலீபான்கள், முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கின்றனர். இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் அவர்களுடைய செயல்பாடு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கின்றனர்.

இது குறித்து தலீபான்கள் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்தது. காபூல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்து தான், உள்நோக்கத்துடன் கூடியது கிடையாது. தாலீபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது, முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு படைகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும் எங்களுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. அவர்களின் வீடுகளை சோதனையிட மாட்டோம்.

பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாமிய சட்டப்படி வழங்க தலிபான்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியேசெல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அ ரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பும் இல்லை. ஆனால், தலிபான்கள் வந்தபின், மீண்டும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் , சர்வதேச அமைப்புகள், உதவும் அமைப்புகள் முக்கியமானவை, அவற்றின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை உலக நாடுகளுக்கு உறுதி அளிக்கிறோம். இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிப்போம், ஊடக சுதந்திரமும் அளிக்கப்படும்” என்றார்.

Leave your comments here...