இந்திய எல்லையில் ஊடுருவ 140 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தகவல்..!

இந்தியாஉலகம்

இந்திய எல்லையில் ஊடுருவ 140 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தகவல்..!

இந்திய எல்லையில் ஊடுருவ 140 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தகவல்..!

ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடனான நட்புறவிலிருந்து விலகி அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லையில் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் இடையே பிப்., ல் நடந்த தொலைபேசி உரையாடலை அடுத்து, எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பின் ‘கிரே’ பட்டியலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவே பாகிஸ்தான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த ஆண்டு நம் ராணுவத்தினரால் தகர்த்து அழிக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்புகளை பாகிஸ்தான் மறுசீரமைப்பு செய்து வருகிறது. ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவ 140க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். நம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சி, ஊடுருவல் முயற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து உள்ளது. அவர்கள் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகள், மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் தஞ்சம் அடைந்திருக்கக் கூடும். அவர்கள் காஷ்மீர் மண்ணின் மக்களையும் வன்முறைக்கு தூண்டி வருகிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார் இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...