இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி.!

இந்தியாஉலகம்

இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி.!

இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி நிதியுதவி.!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அண்டணி பிளின்கள் இந்தியா வந்துள்ளார்.

தேசிய பாதுபாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிளின்கன், ஆப்கானிஸ்தான் பிரச்னை, குவாட் நாடுகளின் பாதுகாப்பு, சீன விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குவாட் நாடுகளில் தடுப்பூசி ஒத்துழைப்பு மூலம் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றின் தொடக்க காலத்தில், அமெரிக்காவிற்கு இந்தியா செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூறுவதாக தெரிவித்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் என குறிப்பிட்ட பிளின்கன், பன்முக தன்மையே இரு நாடுகளின் வலிமை என கூறினார்.

இதனிடையே, இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் தடுப்பூசி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற இந்த நிதி உதவும் என குறிப்பிட்டார். இதனை வரவேற்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

Leave your comments here...