பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை.!

இந்தியா

பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை.!

பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை.!

பிரான்சில் இருந்து இதுவரை 26 ரபேல் போர் விமானங்கள் நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து உள்ளன” என ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் கூறினார்.

நம் ராணுவம் சார்பில் அதிக அளவில் அயுதங்களை எடுத்துச் செல்வதுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட 36 ‘ரபேல்’ போர் விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்சின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அப்போது ”ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் உரிய கால அட்டவணைப்படி நடைபெறுகிறது. இதுவரை 26 விமானங்கள் வந்து சேர்ந்துள்ளன” என்றார்.

இதற்கிடையே விமானப்படையின் கிழக்கு ‘கமாண்ட்’ 101வது பிரிவில் ரபேல் விமானங்கள் நேற்று சேர்க்கப்பட்டன.மேற்கு வங்க மாநிலம் ஹாசிமாரா விமானப்படை தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி பதவுரியா பங்கேற்று ரபேல் விமானங்களை சேர்த்தார்.கடந்த ஆண்டு செம்டம்பரில் ‘கோல்டன் ஆரோ’ எனப்படும் 17வது பிரிவில் ஏற்கனவே வந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...