ஆதாரில் கைபேசி எண்ணை இணைப்பதற்கான சேவை : இந்திய தபால் கட்டணங்கள் வங்கி அறிமுகம்

இந்தியா

ஆதாரில் கைபேசி எண்ணை இணைப்பதற்கான சேவை : இந்திய தபால் கட்டணங்கள் வங்கி அறிமுகம்

ஆதாரில் கைபேசி எண்ணை இணைப்பதற்கான சேவை : இந்திய தபால் கட்டணங்கள் வங்கி அறிமுகம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பதிவாளர் எனும் முறையில், ஆதாரில் கைபேசி எண்ணை சேர்ப்பதற்கான சேவையை இந்திய தபால் துறையின் கட்டணங்கள் வங்கி இன்று அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், ஆதார் வைத்திருப்பவர் தனது வீட்டிலிருந்தவாறே தபால்காரர் மூலம் தனது கைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்கலாம். 650 இந்திய தபால் கட்டணங்கள் வங்கிகள், 146,000 தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் சேவகர்களைக் கொண்ட விரிவான வலைப்பின்னலின் மூலம் இந்த சேவை வழங்கப்படும். திறன் பேசிகள் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கொண்டு பல்வேறு வங்கி சேவைகள் இவர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய சேவை குறித்து பேசிய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சௌரப் கார்க், ஆதார் தொடர்பான சேவைகளை எளிமைப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தற்போது தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் சேவகர்களின் மூலம் இந்திய தபால் கட்டணங்கள் வங்கிகளின் வாயிலாக மக்களின் வீடுகளுக்கே சென்று கைபேசி எண்ணை சேர்க்கும் சேவையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கைபேசி எண்ணை ஆதாருடன் இணைத்த பிறகு, தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அரசின் பல்வேறு வசதிகள் மற்றும் சேவைகளை பெற முடியும் என்பதால், இந்த சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்திய தபால் கட்டணங்கள் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு ஜெ வெங்கட்ராமு கூறுகையில், “ஆதாரின் மூலம் பல கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து, சமையல் எரிவாயு மானியம், பாஹல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களது வங்கி கணக்குகளுக்கே நேரடியாக அரசு பணத்தை செலுத்தி வருகிறது. நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் போன்ற பல சேவைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயன்பாடு மற்றும் சேவை நோக்கில் அனைத்து மக்களுக்கும் ஆதார் முக்கியமாகி உள்ளது.

தபால் அலுவலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் சேவகர்களின் மிகப்பெரிய வலைப்பின்னலின் வாயிலாக வழங்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதாருடன் கைபேசி எண்ணை இணைக்கும் சேவை, சேவை குறைவாக வழங்கப்படும் மற்றும் வங்கி சேவைகள் சென்றடையாத பகுதிகளில் டிஜிட்டல் பாகுபாட்டை போக்குவதற்கான இந்திய தபால் கட்டணங்கள் வங்கியின் லட்சியத்தை அடைய உதவும்,” என்றார்.

கைபேசி எண்ணை இணைப்பதற்கான சேவையை தற்சமயம் வழங்கி வரும் இந்திய தபால் கட்டணங்கள் வங்கி, குழந்தைகளை சேர்ப்பதற்கான சேவையையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பயிற்சி பெற்ற தபால்காரர்கள்/கிராம தபால் சேவகர்களின் தேசிய உள்கட்டமைப்பின் மூலம், ஆதார் சேவைகளை அனைத்து கிளைகள்/மாவட்டங்களில் வழங்க இந்திய தபால் கட்டணங்கள் வங்கி தயாராக உள்ளது.

இந்திய தபால் கட்டணங்கள் வங்கி குறித்து: தகவல் தொடர்புப் அமைச்சகத்தின் தபால் துறையால் நிறுவப்பட்ட இந்திய தபால் கட்டணங்கள் வங்கி, 100 சதவீதம் இந்திய அரசுக்கு சொந்தமானதாகும். 2018 செப்டம்பர் 1 அன்று மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்திய தபால் கட்டணங்கள் வங்கி தொடங்கப்பட்டது.

எளிதில் அணுகக்கூடிய, குறைந்த கட்டணங்களில் கட்டணங்களை வழங்கும் நம்பிக்கைக்குரிய வங்கிய இந்திய பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்திய தபால் கட்டணங்கள் வங்கி தொடங்கப்பட்டது. 155,000 தபால் அலுவலகங்கள் (கிராமப் பகுதிகளில் 135,000) மற்றும் 3 லட்சம் தபால் ஊழியர்களைக் கொண்டு குறைவாக சேவைகளை பெற்றுள்ள அல்ல மற்றும் வங்கி சேவைகள் சென்றடையாத பகுதிகளுக்கான தடைகளை தகர்ப்பதே இந்திய தபால் கட்டணங்கள் வங்கி அடிப்படை குறிக்கோளாகும்.

காகிதமில்லாத, ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தாத மற்றும் உருவமில்லாத வங்கியை திறன்பேசி மற்றும் பயோமெட்ரிக் கருவியின் மூலம் வாடிக்கையளரின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய தபால் கட்டணங்கள் வங்கி கட்டமைக்கப்பட்டுள்ளது. 13 மொழிகளில் எளிதான மற்றும் குறைந்த கட்டண வங்கி சேவைகளை இந்திய தபால் கட்டணங்கள் வங்கி வழங்குகிறது.

ரூபாய் நோட்டுகளை குறைவாக பயன்படுத்தும் பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்து, டிஜிட்டல் இந்தியா லட்சியத்திற்கு வலுவூட்ட இந்திய தபால் கட்டணங்கள் வங்கி உறுதி பூண்டுள்ளது. நிதி நிலையில் பாதுகாப்போடும், அதிகாரத்தோடும் ஒவ்வொரு இந்தியரும் விளங்குவதற்கான சம வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே இந்தியா வளமிக்க நாடாக மாறும். எங்களது லட்சியம் உண்மையானது- ஒவ்வொரு வாடிக்கையாளரும் முக்கியமானவர், ஒவ்வொரு பரிவர்த்தனையும் முக்கியமானது, ஒவ்வொரு சேமிப்பும் மதிப்புமிக்கது.

Leave your comments here...