தலைநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.!

இந்தியா

தலைநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.!

தலைநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.!

சுதந்திர தினத்தன்று, டில்லியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதிகள் மிகுந்த பின்னடவை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக பயங்கரவாதிகள் தேசிய தலைநகரில் இந்த நாளிலேயே ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு அமைப்புகள் தில்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும், ஆக.,15 சுதந்திரதினத்தன்று, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள், சதிச்செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால், முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, டிரோன் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை விமானப்படையினர் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் , டிரோன்கள் செயல்பாடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Leave your comments here...