உபியில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…! 

இந்தியா

உபியில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…! 

உபியில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…! 

உத்தரபிரதேச பாஜக அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பான மதமாற்றம் மற்றும் மதம் மாற்றுவதற்காக செய்யப்படும் திருமணங்களும் இந்த சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. ஆனால் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான பெரும்பான்மை ஆட்சியால் இந்த சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.


இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமை, நாக்பூரில் இருந்த பிரசாத் ரமேஷ்வர் கவாலே (நாக்பூர்), கௌசர் ஆலம் சௌகத் அலி கான் (ஜார்கண்ட்) மற்றும் பூப்ரியா பண்டோ தேவிதாஸ் மன்கர் (மகாராஷ்டிரா) ஆகியோரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.


இவர்கள் மீது மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் லக்னோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த மாதம் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்து அவர்களுக்கு, இந்திய அளவில் நடைபெறும் மதமாற்றங்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...