விடுதலைஅம்ருத் மகோத்சவம்: குறும்பட போட்டியை தொடங்கியது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்.!

இந்தியா

விடுதலைஅம்ருத் மகோத்சவம்: குறும்பட போட்டியை தொடங்கியது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்.!

விடுதலைஅம்ருத் மகோத்சவம்: குறும்பட போட்டியை தொடங்கியது பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்.!

உலகின் மிகப் பெரிய வீட்டு வசதி திட்டமான, பிரதமரின் வீட்டு வசதி திட்டம்- நகர்ப்புறம், இரு தனித்துவமான முயற்சிகளை தொடங்கியுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்ல, மகிழ்ச்சி இல்லம் (Khushiyon Ka Aashiyana) என்ற பெயரில் குறும்பட போட்டியும், வீட்டில் உரையாடல் (Awas Par Samvaad) என்ற தலைப்பில் 75 கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் 6ம் ஆண்டு விழா கடந்த ஜூன் 25ம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இந்த இரு நடவடிக்கைகளின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், அளிக்கப்பட்ட நிதி ரூ.1 லட்சம் கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் 1.12 கோடி வீடுகள் என்ற இலக்கை அடைவதை நோக்கி, செல்கிறது. இவற்றில், 50 லட்சம் வீடுகள் முடிந்துவிட்டன, 83 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்திய விடுதலையின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த குறும்படம் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துக் கொள்ளலாம். இதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

Leave your comments here...