அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச டிக்கெட் விநியோகம்…!

தமிழகம்

அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச டிக்கெட் விநியோகம்…!

அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச டிக்கெட் விநியோகம்…!

திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.

அதன்படி கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பெண்களை தொடர்ந்து திருநங்கைகள்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் பயணிக்க வழங்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சிடப்பட்டு, ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி முதல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து, நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு நேற்று முதல் இலவச பயண சீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்த பிரிவில், எத்தனை பேர் பயணித்தனர் என்ற, கணக்கை பெறும் வகையில் இந்த சீட்டு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave your comments here...