புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள ஃபாசில் மாம்பழம், பஹ்ரைனுக்கு ஏற்றுமதி..!

இந்தியாஉலகம்

புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள ஃபாசில் மாம்பழம், பஹ்ரைனுக்கு ஏற்றுமதி..!

புவியியல் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள ஃபாசில் மாம்பழம், பஹ்ரைனுக்கு ஏற்றுமதி..!

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாம்பழங்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட புவியியல் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற ஃபாசில் மாம்பழ வகை, இன்று பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கொல்கத்தாவில் உள்ள டிஎம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் பஹ்ரைனில் உள்ள அல்ஜசீரா குழுமத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

புவியியல் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற கிர்சப்பட்டி, லக்கன்போக், ஃபாசில், தஷ்ஷரி, அமராபாலி, சௌசா, லங்டா ஆகிய மாம்பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பஹ்ரைனில் கடந்த ஜூன் மாதத்தில், ஒரு வார காலம் நடைபெற்ற இந்திய மாம்பழ ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் 16 வகையான மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

‘பழங்களின் அரசன்’ என்று இந்தியாவில் அழைக்கப்படும் மாம்பழம், பழங்கால நூல்களில் கல்பவிருட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மாம்பழம் விளைகின்ற போதும், உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அல்போன்சா, கேசர், டோட்டாபுரி, பங்கனபள்ளி ஆகியவை இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி வகைகளாகும்.

Leave your comments here...