டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ; இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ; இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ; இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..

பல ஆண்டுகளாக, பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற விளையாட்டு வீரர்களைக் குறித்து தேசம் பெருமைப்படுவதாக பிரதமர் த மோடி, இன்று ஒலிம்பிக் தினத்தில் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியக் குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை செய்தியில் கூறியுள்ளதாவது:

“இன்று, ஒலிம்பிக் தினத்தன்று, பல ஆண்டுகளாக, பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். விளையாட்டிற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.


சில வாரங்களில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட நமது குழுவினர் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரித்துக் கொள்கிறேன். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்வரை, `மைகவ்’ இணையதளத்தில் ஒரு சுவாரஸ்யமான வினாடி-வினா நடக்கவிருக்கிறது. அதில், உங்கள் அனைவரையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களை பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave your comments here...