“2022-க்குள் இந்திய விமானப்படையில் ரஃபேல் இணைப்பு”-விமானப் படை தகவல்

இந்தியா

“2022-க்குள் இந்திய விமானப்படையில் ரஃபேல் இணைப்பு”-விமானப் படை தகவல்

“2022-க்குள் இந்திய விமானப்படையில் ரஃபேல் இணைப்பு”-விமானப் படை தகவல்

பிரான்ஸின் 36 ரஃபேல் போர் விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள், இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என விமானப் படையின் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதெளரியா தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 21போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன. இந்நிலையில், ரஃபேல் விமானங்களை 2022ஆம் ஆண்டுக்குள் படையில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இலக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என ஆர்.கே.எஸ். பதெளரியா கூறியுள்ளார்.

Leave your comments here...