கேரள தங்கம் கடத்தல் வழக்கு : சொப்னா சுரேஷ் உள்பட 53 பேருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்

இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு : சொப்னா சுரேஷ் உள்பட 53 பேருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு : சொப்னா சுரேஷ் உள்பட 53 பேருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்

கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது தங்கக்கடத்தல் வழக்கு. கடந்த ஜூலை 4 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்துக்கு உணவுப்பொருள் என்ற பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் யு.ஏ.இ தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஜரித் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக வேலை செய்யும் ஸ்வப்னா சிக்கியதுதான் எதிர்கட்சியினருக்கு சாதகமாக போய்விட்டது. முதல்வரின் செயலாளரும் ஐடி துறை செயலாளராகவும் இருக்கும் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிவசங்கர் அடிக்கடி ஸ்வப்னாவின் வீட்டிற்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது

இதுதொடர்பாக, முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர், சொப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சிவசங்கர், சொப்னா சுரேஷ் உள்பட 53 பேருக்கு வழக்கை விசாரித்து வரும் சுங்க இலாகா ஆணையர் சுமித்குமாா், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், அவர்கள் மீது சுங்க சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேட்கப்பட்டுள்ளது. 53 பேரும் பதில் அளிக்க 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...