கிறிஸ்தவ இளம் பெண்ணை ஏமாற்றிய சமீர் குரேஷி – குஜராத்தில், கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவான முதல் வழக்கு..!

இந்தியா

குஜராத் மாநிலத்தில் ‘குஜராத் மதச் சுதந்திர சட்டம் -2021’ அமலில் உள்ளது. இச்சட்டத்தின்படி ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம்சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டம் குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் நபர் கைதாகியுள்ளார்.

குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் என்ற பெயருடன், சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம்பெண்ணுடன் பழகி உள்ளார்.

பின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிடில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.திருமணம், முஸ்லிம் முறைப்படி நடந்தபோதுதான், சமீர் குறித்த உண்மைகள் அவருக்கு தெரியவந்தது.

பின், மனைவியின் பெயரை மாற்றிய அவர், மதம் மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து, சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தில் முதல் வழக்கை பதிவு செய்த போலீசார், சமீர் குரேஷியை கைது செய்தனர்.

Leave your comments here...