கொரோனா பரிசோதனை திறனை அதிகரிக்க சிஎஸ்ஐஆர் அமைப்புடன் இணைந்த டாடா எம்டி.!

இந்தியா

கொரோனா பரிசோதனை திறனை அதிகரிக்க சிஎஸ்ஐஆர் அமைப்புடன் இணைந்த டாடா எம்டி.!

கொரோனா பரிசோதனை திறனை அதிகரிக்க சிஎஸ்ஐஆர் அமைப்புடன் இணைந்த டாடா எம்டி.!

நாடு முழுவதும் உள்ள இரண்டாம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் கொவிட்-19 பரிசோதனை திறனை அதிகரிக்க அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் டாடா குழுமத்தின் புதிய மருத்துவ சிகிச்சை அமைப்பான டாடா எம்டி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

எதிர்காலத்தில் கொவிட்-19 பரிசோதனைகளின் தேவை அதிகரித்தால், அதை சமாளிக்க இந்த இரு அமைப்புகளும் ஒன்றிணைந்துள்ளன. இதன்படி நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் பரிசோதனைகூடங்கள் பயன்படுத்தப்பட்டு, நாட்டின் சிறு நகரங்களில் கூட கொவிட் பரிசோதனை திறன் அதிகரிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை சிஎஸ்ஐஆர் மற்றும் டாடா எம்டி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும். டாடா எம்டி நிறுவனத்தின் கொவிட் பரிசோதனை உபகரணங்கள் மூலம் ஆர்டி-பிசிஆர், சிஆர்ஐஎஸ்பிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த உபகரணங்களை சிஎஸ்ஐஆர்- மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் (ஐஜிஐபி)-ன் பெலுடா டெக்னாலஜி வழங்குகிறது.

இது குறித்து சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி பாண்டே கூறுகையில், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், தடுப்பூசியை தவிர, துரித பரிசோதனை, கொவிட் பாதிப்பு நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகியவை சிறந்த உத்தியாக உருவெடுத்துள்ளன. டாடா எம்டி-யுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் பரிசோதனை கூடங்களில் ஆர்டி-பிசிஆர் மற்றும் சிஆர்ஐஎஸ்பிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது நாட்டின் கொவிட் பரிசோதனை திறனை அதிகரிக்கும்’’ என்றார்.

இது தவிர 3 அறைகளை கொண்ட பரிசோதனை வாகனத்தையும் டாடா எம்டி ஈடுபடுத்துகிறது. இதை பாதிப்பு பகுதிக்கே கொண்டு சென்று கொவிட் பரிசோதனை செய்ய முடியும். இதன் மூலம் நாட்டின் கொவிட் பரிசோதனை திறனை அதிகரிக்க முடியும்.

Leave your comments here...