ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு, மத்திய அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

இந்தியா

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு, மத்திய அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு, மத்திய அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்துக்கு, மத்திய அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்துக்கு 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.6,998.97 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.995.33 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.1,614.18 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

மேற்கு வங்கத்துக்கு இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அளித்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், 2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மேற்கு வங்கத்துக்கு தேவையான முழு உதவியும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஜல்ஜீவன் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மொத்தம் இருந்த 163.25 லட்சம் கிராம வீடுகளில் 2.14 லட்சம் (சுமார் ஒரு சதவீதம்) கிராம வீடுகளுக்கு மட்டுமே, குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. மேற்கு வங்கத்தில் கடந்த 21 மாதத்தில், 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் 41,357 கிராமங்களில் உள்ள 1.63 கோடி வீடுகளில், 1.48 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவுள்ளன. 2020-21ம் நிதியாண்டில், 55.58 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 12.48 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே மேற்கு வங்கம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது. இந்த திட்டத்தை மேற்குவங்கம் மந்தமாக அமல்படுத்தியதால், முழு ஒதுக்கீட்டு நிதியை பெற முடியவில்லை.

தற்போது, 43.10 லட்சம் கிராம வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பை விரைவில் வழங்கவும், 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டில் 52.74 லட்சம் வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவும் மேற்குவங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய இத்திட்டத்தை 4 மடங்கு வேகத்தில் மேற்குவங்கம் அமல்படுத்த வேண்டும்.

Leave your comments here...