கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

உலகம்

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

கொரோனா தொற்று குறைந்தால் தொற்று முடிந்துவிட்டதாக எண்ணிக் கூடாது. பல்வேறு நாடுகளில் பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

உலக மக்கள் தொகையில் இதுவரை 10 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...