சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

இந்தியா

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சி.பி.ஐ. இயக்குனர் பதவி பிப்ரவரி 4-ம் தேதியில் இருந்து காலியாக இருக்கிறது. கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியை தற்போது வகித்து வருகிறார்.

இதற்கிடையே, புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுக்கும்போது விதிமுறைகளின்படி பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இந்த கூட்டம் நடந்தது.

இந்நிலையில், சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.985ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த ஜெய்ஸ்வால் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...