ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி.!

சமூக நலன்தமிழகம்

ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி.!

ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்கள் கொரோனா  விழிப்புணர்வு ஓவியப்போட்டி.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினார்கள்.

ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,முத்துமீனாள் , ஸ்ரீதர் ஆகியோர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் நடத்தினார்கள்.பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது.வாட்சப் உள்ள மாணவர்கள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பள்ளி மாணவர்களை மொபைல் வழியாக பேச செய்து பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நலன் குறித்தும், புத்தகங்கள் படிப்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்கள்.மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அவர்களுடைய மனநிலைகள் மாறாமல் இருப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து ஆசிரியர்கள் எடுத்து வருவதாக தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.இதற்கு மாணவர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

Leave your comments here...