மாநிலங்களுக்கு கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா

மாநிலங்களுக்கு கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு

மாநிலங்களுக்கு கூடுதலாக 22.17 லட்சம்  ரெம்டெசிவிர் ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு

ரெம்டெசிவிர் மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மே 23ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரையிலான காலத்துக்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, மே 23ஆம் தேதி வரை 76.70 லட்சம் குப்பிகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 98.87 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் சதானந்த கவுடா ட்விட்டரில், “மே 23 முதல் 30 வரை அனைத்து மாநிலங்கள்/ஒன்றிய பிரதேசங்களுக்கு கூடுதலாக 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 76.70 லட்சம் குப்பிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக 98.87 லட்சம் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 3,741 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave your comments here...