அகஸ்தியர் கோயில் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் – புகார் மனு வாபஸ் அறிக்கை

தமிழகம்

அகஸ்தியர் கோயில் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் – புகார் மனு வாபஸ் அறிக்கை

அகஸ்தியர் கோயில் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் – புகார் மனு வாபஸ் அறிக்கை

அர்ஜுன் சம்பத் அறிக்கை! வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள்! இந்து மக்கள் கட்சியின் புகார் மனு வாபஸ் பெறப்படுகிறது!

அகத்தீஸ்வரர் திருக்கோயில் குறித்து! நமக்கு கிடைத்த தகவலின் பேரில் நாம் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், ஊடகங்களுக்கும் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன தகவலை தெரிவித்து,அதற்கு உரிய பரிகாரம் மேற்கொள்ளும்படி முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்திருந்தோம்.

இப்பொழுது நமது அமைப்பின் சார்பில் கள ஆய்வு செய்ததில் மேற்கண்ட தகவல்கள் தவறானவை. வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதத்தை இப்படி தவறாக யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். எனவே வதந்திகளை பரப்புவதற்கு நாம் உடந்தையாக இருக்கக் கூடாது இந்து மக்கள் கட்சியின் சார்பில் அகத்தீஸ்வரர் கோயில் சேதப்பட்டது குறித்து வெளியிட்ட கோரிக்கை புகார் மனு வாபஸ் பெறப்படுகிறது. தவறுக்கு மன்னிக்கவும்!

#கள_ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையில் உள்ள அகஸ்தியர் திருக்கோவிலில் அகஸ்தியர் சிலைகள் சமூக விரோதிகளால் தகர்க்கப்பட்டது,என்ற செய்தி அறிந்து தமிழ் திரு அர்ஜுன் சம்பத் ஜி அவர்களின் உத்தரவின் பேரில் அதன் உண்மை நிலவரம் குறித்து கள ஆய்வு செய்தோம். அதன்படி இந்து மக்கள் கட்சி பூஜாரிகள் பேரவையின் உதவியோடு திருக்கோவிலின் பூஜகரான சதீஷ் என்பவர் மூலமாகவும், அப்பகுதியில் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்களின் மூலமாகவும் தகவல்கள் அறியப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தின் காரணமாக அகஸ்தியர் சிலை பின்னப்பட்டு விட்டதாகவும் மற்றபடி எந்தவித அசம்பாவித செயலும் தற்போது அங்கு நிகழவில்லை என்றும் தகவல் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் தற்போது உலா வந்து கொண்டிருக்கும் தகவலானது தவறான தகவல். நமது இந்துத்துவ சொந்தங்கள் அந்த தகவலை மேலும் பரப்ப வேண்டாம் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

தா. வசந்தகுமார்
மாநில செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
8754109485

Leave your comments here...