முககவசம், கபசுர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை ஒழிக்கும் “தனி ஒருவன்”

உள்ளூர் செய்திகள்சமூக நலன்

முககவசம், கபசுர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை ஒழிக்கும் “தனி ஒருவன்”

முககவசம், கபசுர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை ஒழிக்கும் “தனி ஒருவன்”

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51) டீக்கடை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் சூழ்நிலையில் அதிகமான மக்கள் இதனால், பாதிப்படைந்தனர். கொரோனா தொற்று முதல் அலையின் போதே கிராமந்தோறும் தனது சொந்த மாருதி ஆம்னி காரில் கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கியும், ஒலிப்பெருக்கி கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசங்கள் இன்றி வெளியே வரவேண்டாம் எனவும் என கூறியவாறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ரவிச்சந்திரன். ஐந்தாவது வரை மட்டுமே படித்துள்ள 51 வயதான ரவிச்சந்திரன்.

தற்போது பரவி வரும் கொரோனா‌ தொற்று 2வது அலை ஏற்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள வலையங்குளம் பெருங்குடி, சாமநத்தம்,சிந்தாமணி, எலியார்பத்தி, அவனியாபுரம் உள்ளிட்ட 11 கிராமப்புற பகுதிகளில் காலை, மாலை இருவேளைகளிலும் தனது மாருதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அவனியாபுரம் பெரியார் சிலை அருகே போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் மூலம் சாலைகளில் வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்கி மைக் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தனி ஒருவனாக சமூகத்தில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் ” டீக்கடை” ரவிச் சந்திரனின் பணி பாராட்டுக்குரியது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...