சென்னை விமான நிலையத்தில் எல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் எல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் எல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ 57.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே-544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கி, விமான நிலையத்திலிருந்து அவசரமாக வெளியேற முற்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது பதுருதீன், 23, என்பவரை சுங்க அதிகாரிகள் வழிமறித்து விசாரித்தனர்.

அவர் படபடப்புடன் காணப்பட்ட நிலையில் அவர் கொண்டு வந்திருந்த பைகள் மற்றும் 55 இன்ச் எல்ஈடி தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.


தொலைக்காட்சிப் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதன் பின்புறத்தில் ஒலிபெருக்கிகளுக்கு உள்ளே தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. ரூ 57.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...