கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி : ரூ.2 லட்சம் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமின்..!

தமிழகம்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி : ரூ.2 லட்சம் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமின்..!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி : ரூ.2 லட்சம் அபராதத்துடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமின்..!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 16ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள் நடிகர் விவேக் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், விவேக் இறப்பிற்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் விளக்கமளித்தனர்.

இதற்கிடையே விவேக்கின் இறுதி சடங்கில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை அளித்து பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ், நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான், முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. பின்னர், முன்ஜாமின் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தண்டபாணி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கியுள்ளார். மேலும், அபராதமாக சுகாதாரத்துறைச் செயலாளர் பெயரில் ரூ.2 லட்சத்திற்கு டிமாண்ட் டிராப் எடுத்து கொரோனா தடுப்பூசி வாங்க நிதியாக வழங்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித வதந்தியும் பரப்பக்கூடாது, பதற்றத்தை உருவாக்க கூடாது என்றும் நிபந்தனை பிறப்பிக்கபட்டுள்ளது.

Leave your comments here...