காரியாபட்டியில் காவல் துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..!

தமிழகம்

காரியாபட்டியில் காவல் துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..!

காரியாபட்டியில் காவல் துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..!

காரியாபட்டியில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா 2வது அலை பரவத்தொடங்கியுள்ளது இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

மேலும் சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் காரியாபட்டி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் பொது இடங்களில் மற்றும் பேருந்துகளில் பயணம் செல்லும் பொழுது முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

காரியாபட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த ஜோதி தமிழழகன் திருமலை குமார் ஆகியோர் பிரச்சார நிகச்சியில் பங்கேற்றனர்.

Leave your comments here...