மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் – பிரதமர் மோடி

அரசியல்இந்தியா

மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் – பிரதமர் மோடி

மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள் –  பிரதமர் மோடி

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.

இந்தநிலையில், மதுரை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

திருவனந்தபுரத்தில் பதானம்திட்டாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- எல்.டி.எஃப் அரசு என்ன செய்தது? முதலில், அவர்கள் கேரளாவின் உருவத்தை சிதைக்க முயன்றனர், பின்னர் அவர்கள் தங்கள் முகவர்கள் மூலம் புனித தளங்களை அழித்தனர்.மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள். சிறு பிள்ளைத்தனமான செயல்களால் புனிதத்தலங்களில் உறுதியை எல்.டி.எஃப் அரசு குலைக்கிறது.

அவர்கள் (எல்.டி.எஃப் & யு.டி.எஃப்) வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார்கள், இரு கூட்டணிகளிலும் வாரிசு ஆட்சிக்கு ஒரு வெறி உள்ளது, மற்ற அனைத்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளன, ஒரு உயர்மட்ட எல்.டி.எஃப் தலைவரின் மகனின் வழக்கு நன்கு அறிவீர்கள் மேலும் இதை பற்றி விவரிக்க நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...