28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடாக இந்தியா உருவானது.!

சமூக நலன்

28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடாக இந்தியா உருவானது.!

28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடாக இந்தியா உருவானது.!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் அறிவிப்பு, கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மறுசீரமைப்பு சட்டத்தின்படி, காஷ்மீர் மாநிலம் நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாறியுள்ளது.அங்கு, காவல்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நில உரிமை மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம் இருக்கும். அதேநேரம் லடாக் யூனியன் பிரதேசம், சண்டிகாரைப்போல சட்டசபை இன்றி, ஆட்சி முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதனை தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே ‘ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு’, ‘ஆல் இந்தியா ரேடியோ- ஸ்ரீநகர்’ மற்றும் ‘ஆல் இந்தியா ரேடியோ- லே’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் ‘ரேடியோ காஷ்மீர்’ என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில், தேசிய மனித உரிமை சட்டம், ஜிஎஸ்டி, மத்திய தகவல் சட்டம், எதிரி சொத்து பறிமுதல் சட்டம், பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் 108 சட்டங்கள் (இன்று முதல்) அமலுக்கு வந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு, காஷ்மீர் உயர்நீதிமன்றம் பொதுவானதாக செயல்படும். கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களாக  பதவியேற்றனர்.

Leave your comments here...