கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ரத்தன் டாடா.!

இந்தியா

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ரத்தன் டாடா.!

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ரத்தன் டாடா.!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை பெற்றனர்.

இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு இணை நோய்களை கொண்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.நாட்டில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதுபோக இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் அவை வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா குழுமத்தின் நிறுவனத்தலைவர் ரத்தன் டாடா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ரத்தன் டாடா இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று எனக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கிடைத்ததற்கு நன்றி. இது சிரமம், வலி அற்றதாக உள்ளது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டு அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.

Leave your comments here...