திமுக வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார் – 500 வாக்குறுதிகள்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

அரசியல்தமிழகம்

திமுக வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார் – 500 வாக்குறுதிகள்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

திமுக வின் தேர்தல் அறிக்கையை முக.ஸ்டாலின் வெளியிட்டார் – 500 வாக்குறுதிகள்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் வைத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதனைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்:-

*திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

*அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

*பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்

*கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்

*பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்

*ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

*அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்

*சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும்.

*சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்

*தமிழக தொழில்நிறுவனங்களில் தமிழருக்கு 75% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்.

*நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் கொண்டுவரப்படும்.

*பயிற்சி முடித்த 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ1,000 கோடி ஒதுக்கப்படும்

*ஆட்டோ தொழிலாளர் ஆட்டோ வாங்க ரூ10,000 மானியம் வழங்கப்படும்

*அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும்

*நீர்மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டம் கொண்டுவரப்படும்

*பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளருக்கு தனிநல வாரியம் உருவாக்க்கப்படும்

*அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்

*மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

*8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்

*500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்

*சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்

*நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

*இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

*சத்துணவு திட்டத்தில் காலையில் பால் வழங்கப்படும்

*வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டங்கள், செயலாக்கதுறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும்

*ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிகையை விரைவில் பெறுவோம்

*முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

*விவசாய துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

*இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா ரூ1,000 வழங்கப்படும்

*மருத்துவ படிப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்- திமுக தேர்தல் அறிக்கை

*ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

*வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான தனியார் துறை உருவாக்க்கப்படும்.
தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்” என்று கூறினார். நிறைவாக கலைஞர் கூறுவது போல என்று, “சொன்னதை செய்வோம். செய்வதை செல்வோம்” என்று கூறி தனது உரையினை முடித்தார்.

Leave your comments here...