4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது..!

உள்ளூர் செய்திகள்

4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது..!

4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது..!

சென்னையில் 4.6 கிலோ சாரஸ் என்ற போதைப் பொருளை, சென்னை மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் பறிமுதல் செய்து, கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்தனர்.

உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அராமெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பார்சல் அலுவலகத்தில் ஒரு அட்டை பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் இருந்த 22 பொம்மைகளில், 4.6 கிலோ சாரஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருளாகும்.இந்த அட்டைப் பெட்டி மேற்கு வங்கத்திலிருந்து கத்தார் நாட்டுக்கு அனுப்பப்பட இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார் என சென்னை மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...